Home /News /national /

2014க்கு பின் பாஜக கூட்டணியின் முதல் இஸ்லாமிய வேட்பாளர் - இவர் யார் தெரியுமா?

2014க்கு பின் பாஜக கூட்டணியின் முதல் இஸ்லாமிய வேட்பாளர் - இவர் யார் தெரியுமா?

BJP

BJP

ஹைதர் அலி கான், ராம்பூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் தந்தை நவாப் காசிம் அலி கான், 4 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர்.

    உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் 2014 தேர்தலுக்கு பின்னதாக பாஜக கூட்டணி முதல் முறையாக இஸ்லாமிய வேட்பாளரை தற்போது நிறுத்தியுள்ளது.

    எதிர்வரும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலாக உள்ளது. 403 தொகுதிகளை உள்ளடக்கிய இம்மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சியமைக்கும் முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜகவிலிருந்து பல தலைவர்களை இழுத்து அக்கட்சிக்கு சவால் விடுத்திருக்கிறது அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கட்சி. இருப்பினும் அகிலேஷின் குடும்ப உறுப்பினர்களையே தன் பக்கம் இழுத்து பதிலடி தந்தது பாஜக.

    7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக, அப்னா தளம் ஒரு கூட்டணியாகவும், சமாஜ்வாதி ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் தனியாகவும் தேர்தலை சந்திக்க இருக்கின்றன. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    Also read:    கொரோனா முடிவுக்கு வருகிறது - சுகாதார வல்லுநர்கள் ஹேப்பி நியூஸ்

    அதே நேரத்தில் பாஜக கூட்டணி 2014 தேர்தலுக்கு பின்னதாக, தற்போதைய தேர்தலில் தான் இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனுப்பிரியா பட்டேல் தலைமையிலான அப்னா தளம், சூயர் தொகுதியில் 36 வயதாகும் ஹைதர் அலி கான் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 13ம் தேதி, காங்கிரஸ் கட்சி இவரை வேட்பாளராக அறிவித்திருந்தது, ஆனால் அந்த வாய்ப்பை மறுத்த ஹைதர் அலி கான், அப்னா தளத்தில் இணைந்தார்.

    ஹைதர் அலி கான், ராம்பூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் தந்தை நவாப் காசிம் அலி கான், 4 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். காசிம் கடந்த 2017 தேர்தலில் சூயர் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளராக களமிறங்கி சமாஜ்வாதி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். ஹைதர் அலி இங்கிலாந்தின் எஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர். இவரின் தாத்தா நூர் பனோ புகழ்பெற்ற காங்கிரஸ் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also read:  துரதிர்ஷ்டவசமாக பாஜகவை 25 வருடங்களாக வளர்த்துவிட்டோம் - உத்தவ் தாக்கரே

    அப்னா தளம் கடந்த தேர்தலில் ஒரு இஸ்லாமிய வேட்பாளரை கூட களமிறக்கவில்லை. 11 வேட்பாளர்களில் 9 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.

    தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியிருக்கிறது கவனிக்கத்தக்கது.
    Published by:Arun
    First published:

    Tags: BJP, Uttar pradesh

    அடுத்த செய்தி