சினிமா போல ஓடும் காரில் இருந்த ஆப்பிள் ஊழியரை சுட்டுக்கொன்ற போலீஸ்!

துப்பாக்கியால் சுடப்பட்ட கார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  உத்தரப்பிரதேசத்தில் ஆப்பிள் ஸ்டோரில் வேலை செய்யும் நிர்வாக அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நேற்று நள்ளிரவு கோமதிநகர் எக்ஸ்டென்சன் பகுதியில் தன்னுடன் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவருடன் எஸ்யுவி காரில் விவேக் திவாரி வந்துக் கொண்டிருந்தார். அவர் ஆப்பிள் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மீரட் காவல் நிலையத்தைச் சேர்ந்த 2 போலீசார் வழக்கமான வாகன சோதனையை மேற்கொண்டனர். அப்போது காரில் வந்த விவேக் திவாரியையும் தடுத்து நிறுத்தியதாகவும், அதற்கு அவர் காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதனால்  சந்தேகமடைந்த போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

  துப்பாக்கியால் சுடப்பட்ட கார்


  இதில் படுகாயமடைந்த விவேக் திவாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விளக்கம் அளித்த துப்பாக்கியால் சுட்ட போலீசார், தன் மீது 3 முறை காரை ஏற்றி கொல்ல முயன்றதால் தற்காப்புக்காக தான் துப்பாக்கியால் சுட்டதாகவும், மேலும்  அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் தாங்கள் தான் எனவும் கைதான போலீசாரில் ஒருவர் கூறினார்.
  Published by:Vaijayanthi S
  First published: