• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உ.பி.யில் பழமையான மசூதி இடிப்பு: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் கண்டனம்- ஐகோர்ட்டில் வழக்கு பதிய முடிவு

உ.பி.யில் பழமையான மசூதி இடிப்பு: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் கண்டனம்- ஐகோர்ட்டில் வழக்கு பதிய முடிவு

மாதிரிப்படம்.

மாதிரிப்படம்.

உத்தரப் பிரதேசத்தில் 100 ஆண்டுகள் பழமையான மசூதி என்று கருதப்படும் ‘கரீப் நவாஸ் அல் மரூஃப் மசூதி’ இடிக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் கண்டனம் தெரிவித்து மீண்டும் கட்டித்தரக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளது.

  • Share this:
    கடந்த மார்ச் 15-ல் அந்த மசூதி ஆக்கிரமிக்கப்பட்டது எனவும், இதை ஏன் இடிக்கக் கூடாது எனக் கேட்டு அதன் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளிக்காமல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதற்குள், மாவட்ட நீதிமன்றத்திடம் உத்தரவு பெற்று நேற்று முன்தினம் ராம் ஸனேஹி காட் தாலுகாவின் அரசு நிர்வாகத்தினரால் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

    ஆக்கிரமிப்புக் கட்டடம் என்பதால் இடிக்கப்பட்டதாக பாரபங்கி மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் சிங் தெரிவித்துள்ளார், அவர் கூறுகையில், “ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமான கட்டிடம் என அலகாபாத் உயர் நீதிமன் றம் கூறிய பின் அதை இடிக்க செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி யுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.

    மசூதியின் நிர்வாக உறுப்பினர்மவுலானா அப்துல் முஸ்தபா கூறுகையில், ‘‘அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழுகை நடத்த மசூதிக்கு வந்தனர். இதற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டவுடன் அதை எதிர்த்து போராட அச்சத்தின் காரணமாக முஸ்லிம்கள் மசூதிக்கும் வரவில்லை. மசூதிஇடிப்பிற்கு பின் காவல் துறையினரின் சித்ரவதைக்கு அஞ்சிமுஸ்லிம்கள் பலரும் வெளியூர்களுக்கு சென்று விட்டனர்” எனத் தெரிவித்தார்.

    இதனிடையே, உபி சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தலைவர் ஜபூர் அகமது ஃபரூக்கி, மசூதி இடிப்பு சம்பவத்தை கண்டித்துள்ளார். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி 100 ஆண்டுகால மசூதி ஆக்கிரமிப்பு என்ற முன் அனுமானத்தின் பேரில் இடிக்கப்பட்டுள்ளது, இது சட்ட விரோதம், ஏப்ரல் 24, 2021இல் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எரிரானது, எனத் தெரிவித்துள்ளார்.

    இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக ஃபரூக்கி குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இந்திய முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் பொதுச்செயலாளர் மவுலானா காலீத் சைபுல்லா ரஹமான் வெளியிட்ட அறிக்கையில், ‘மசூதியின் மீது எந்த சட்டப்பிரச்சினையும் கிடையாது. ராம் ஸனேஹி காட் தாலூகாவினர் கேட்ட தஸ்தாவேஜ்கள் மீது மசூதியின் நிர்வாகம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.

    அதில் மே 31 வரை மசூதியை இடிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்குள் மசூதி இடிக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். அதில் மசூதியின் இடிபாடுகளை அகற்றாமல் அந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மசூதி இடிப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோருவோம். அங்கு மீண்டும் மசூதியை கட்டித்தரவும் வலியுறுத்துவோம்’ எனத் தெரிவித் துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: