கார் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறிய பெண்!

காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், காவலிலேயே பெண்ணின் தந்தை உயிரிழந்தார்.

news18
Updated: July 28, 2019, 10:31 PM IST
கார் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறிய பெண்!
கார் விபத்து
news18
Updated: July 28, 2019, 10:31 PM IST
உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்திருந்த சிறுமி கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளார். அவருடன் காரில் பயணித்த அவரது அம்மா மற்றும் உறவினப் பெண் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னா பகுதியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண்(பாலியல் வன்கொடுமை நடைபெற்றபோது அவருக்கு வயது 17. அப்போது அவர் சிறுமி). அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.அந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் தலைப்புச் செய்தியானது. அதுகுறித்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டு(2017) உன்னோ தொகுதி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடய சகோதரர் உள்ளிட்ட சிலர் என்னைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்’ என்று புகார் அளித்தார்.


அதனையடுத்து, எம்.எல்.ஏவின் ஆட்கள், புகார் அளித்தப் பெண்ணின் தந்தையை கடுமையாகத் தாக்கினர். அதுதொடர்பாக, காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், காவலிலேயே பெண்ணின் தந்தை உயிரிழந்தார். இந்தகைய சம்பவங்களால் இந்த விவகாரம் நாட்டின் தலைப்புச் செய்தியானது. இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரணை செய்துவருகிறது. இந்த வழக்கை விசாரித்து சி.பி.ஐ, பெண்ணை, எம்.எல்.ஏ அவரது சகோதரர் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் இன்று பாதிக்கப்பட்ட பெண், அவருடயை அம்மா, அவருடைய வழக்கறிஞர், பெண்ணின் உறவினப் பெண்கள் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர்கள் சென்ற காரின் மீது மோதியது. அந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவும், உறவினப் பெண் ஒருவரும் உயிரிழந்தனர். பாலியல் புகார் கூறிய பெண்ணும் வழக்கறிஞரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்த விபத்துக்கு காரணம் எம்.எல்.ஏதான் காரணம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

Also see:

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...