உன்னாவ் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு; பாஜக எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாவலர்களான 3 போலீசாரை இடைநீக்கம் செய்து உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

news18
Updated: August 1, 2019, 12:54 PM IST
உன்னாவ் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு; பாஜக எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்
பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார்
news18
Updated: August 1, 2019, 12:54 PM IST
உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் கைதாகியுள்ள பாஜக எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது லாரி மோதியதில், அவரது தாய் மற்றும் வழக்கறிஞர் பலியாகினர்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் சிறையில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் இதற்கு முதன்மை காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.


பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே போலீசாரின் கஸ்டடியில் உயிரிழ்ந்த நிலையில், அவரது தாயும் விபத்தில் கொல்லப்பட்டது சந்தேக கேள்விகளை எழுப்பியது.

வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் மீது விபத்து தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்தது.

பாதிக்கப்பட்ட பெண் சமீபத்தில் தன் உயிருக்கு ஆபத்து என்று தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால், இந்த கடிதம் தனக்கு வரவில்லை என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

Loading...

இந்நிலையில், இன்று உன்னாவ் சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

மேலும், 7 நாட்களில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். விசாரணைக்கு ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாவலர்களான 3 போலீசாரை இடைநீக்கம் செய்து உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த எம்.எல்.ஏ செங்காரை, கட்சியில் இருந்து நீக்கி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...