உன்னாவ் சிறுமிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குறித்து வெளியான புதிய தகவல்கள்!

உன்னாவ் சிறுமிகள் கொலை

சிறுமிகள் வசிக்கும் கிராமத்திலிருந்து 2 கிமீ தொலைவில் தான் வினயின் வீடு உள்ளது. 4 சகோதரிகள், 2 சகோதரர்கள் பெற்றோர் என 8 பேர் கொண்ட குடும்பம் வினய் உடையது. உன்னாவில் உள்ள பள்ளியில் தான் வினய் படித்துள்ளார் ஆனால் படிப்பை பாதியில் விட்டு விட்டார்.

  • Share this:
உத்தரப்பிரதேசத்தில் விஷம் கொடுத்து 2 சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒரு மைனர் சிறுவன் உட்பட இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்திருக்கும் நிலையில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் கடந்த வாரம் கால்நடை தீவனம் எடுக்கச் சென்ற போது மர்மமான முறையில் 14 மற்றும் 15 வயதுடைய சிறுமிகள் இருவர் இறந்து கிடந்த நிலையில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் தற்போது மைனர் சிறுவன் உட்பட இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள 22 வயது இளைஞர் வினயின் ஒரு தலைக்காதலால் ஏற்பட்ட விபரீதம் இது என காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமிகள் வசித்த கிராமத்திற்கு அருகில் உள்ள Pathakpur என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் 22 வயதாகும் வினய். வினயின் குடும்பத்துக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகில் தான் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு சொந்தமான தோட்டமும் இருக்கிறது. வினயும், சிறுமிகள் மூவரும் ஒரே பள்ளியில் தான் படித்துள்ளனர்.

ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்ற வகையிலும், கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாகவும் வேறு வேலை இல்லாததால் வாலிபர் தனது தோட்டத்துக்கு அடிக்கடி சென்று வந்தார். அந்த வகையில் ஏற்கனவே அறிமுகமான சிறுமிகளை தினசரி சந்தித்து நட்பை வளர்த்திருக்கிறார். இதில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 வயதுடைய சிறுமியை ஒரு தலையாக வினய் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. வினய் தனது காதலை எடுத்துக்கூறியும் சிறுமி அதனை ஏற்காததால் தான் விரக்தியில் 3 சிறுமிகளுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

யார் இந்த வினய்?

சிறுமிகள் வசிக்கும் கிராமத்திலிருந்து 2 கிமீ தொலைவில் தான் வினயின் வீடு உள்ளது. 4 சகோதரிகள், 2 சகோதரர்கள் பெற்றோர் என 8 பேர் கொண்ட குடும்பம் வினய் உடையது. உன்னாவில் உள்ள பள்ளியில் தான் வினய் படித்துள்ளார் ஆனால் படிப்பை பாதியில் விட்டு விட்டார்.

வினய் குறித்து அவரின் பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், வினய் 10ம் வகுப்பில் தோல்வியடைந்ததால் பள்ளிப்படிப்பை கைவிட்டார். படிக்கும் காலத்தில் அவருக்கு சுத்தமாக படிப்பு ஏறாது. பள்ளிக்கு அடிக்கடி வராமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவார். பள்ளியில் படிக்கும் போது உயிரிழந்த சிறுமிகளுடன் அவர் நட்பாக இருந்ததாக தெரியவில்லை என தெரிவித்தார்.

வினயின் பெற்றோர் கூறுகையில்..

சம்பவம் நடைபெற்ற அன்று மாலை 5 மணியளவில் வினய் மற்றும் அவரின் உறவினரான மைனர் சிறுவன் ஆகியோர் வீட்டுக்கு வந்தனர். எதுவுமே நடந்ததாக காட்டிக்கொள்ளவில்லை. வழக்கமாக உணவு உட்கொண்ட பின்னர் தூங்கச் சென்றார். அன்று இரவு போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்து சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக வந்தனர். என தெரிவித்தனர்.
Published by:Arun
First published: