Home /News /national /

உன்னாவ்வில் 11 வயது சிறுமி குழந்தை பெற்றெடுப்பு.. பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது

உன்னாவ்வில் 11 வயது சிறுமி குழந்தை பெற்றெடுப்பு.. பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த ஜனவரி மாதம் சிறுமி வீட்டிற்கு அருகே உள்ள கடையில் சர்க்கரை வாங்க சென்ற போது, 3 பேர் சிறுமியை கடத்தி சென்று சுடுகாட்டில் வைத்து வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Unnao | Unnao | Uttar Pradesh | Tamil Nadu
    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் கடந்த ஜனவரி மாதம் 3 நபர்களால் வன்கொடுமைக்கு ஆளான 11 வயது சிறுமிக்கு கடந்த புதன்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    உன்னாவில் கடந்த புதன்கிழமை வயிறு வலி காரணமாகவும், வயிறு வீங்கியதன் காரணமாகவும் 11 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் சிறுமி வீட்டிற்கு அருகே உள்ள கடையில் சர்க்கரை வாங்க சென்ற போது, 3 பேர் சிறுமியை கடத்தி சென்று சுடுகாட்டில் வைத்து வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 3 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ALSO READ | துண்டு துண்டாக கண்டறியப்பட்ட இளம்பெண்ணின் சடலம் - வெவ்வேறு சூட்கேஸில் கிடந்த கொடூரம்!
     இதில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி,  தீராத வயிற்று வலியால் துடித்துள்ளார். இவருக்கு கடந்த புதன்கிழமை சுகபிரசவம் நடந்துள்ளது. அதில் அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இருவரும் நலமாக இருப்பதாகவும், பிறந்த குழந்தைக்கு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Crime News, Rape, Unnao Case, Uttar pradesh

    அடுத்த செய்தி