திருமணமாகாத மகள் தனது திருமணச் செலவுகளை இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் பெற்றோரிடம் இருந்து பெற உரிமை உள்ளது என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சத்தீஸ்கரில் திருமணம் ஆகாத பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு ஆகும் ரூ.25 லட்சத்தை பெற்றோரிடம் இருந்து பெற்று தரும்படி தொடர்ந்த வழக்கை அம்மாநில குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அந்த பெண் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கெளதம் பாதூரி மற்றும் சஞ்சய் அகர்வால் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய சமுதாயத்தில் திருமணத்திற்கு முன்பும், திருமணத்தின் போதும் செலவழிக்கப்பட வேண்டியது உள்ளது. அத்தகைய செலவுகளை திருமணமாகாத பெண்கள் பெற்றோர்களிடம் இருந்து கேட்கும் போது, நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
ALSO READ | டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேலும், அந்த பெண் தனது மனுவில், தனது தந்தை பணி ஓய்வுக்குப் பிறகு ரூ.75 லட்சம் பெற்றதாகவும், அதில் ரூ.25 லட்சம் இன்னும் அரசால் வழங்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், ஆர் துரைராஜ் என்பவருக்கு எதிராக சீதாலட்சுமி அம்மாள் என்பவர் தொடர்ந்த, வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளர், மேலும், அவர், பராமரிப்புத் தொகையில் திருமணச் செலவுகள் அடங்கும் என்றும், தனது மனுவை தள்ளுபடி செய்தகுடும்ப நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் சட்டப்பிரிவு 20(3) பற்றி விவாதித்தது. அதாவது, ஒரு நபர் தனது வயதான அல்லது உடல்நலம் சரியில்லாத பெற்றோர்களை கவனித்து கொள்வதும், திருமணம் ஆகாத மகள், தன்னை பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அவர்களை பராமரிக்க வேண்டிய கடமை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி, 2016ல் குடும்ப நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை நாங்கள் ரத்து செய்துவிட்டு, 1956 ஆம் ஆண்டு சட்டத்தின்படி பிரிவு 3(b) (ii)ன் அடிப்படையில் தகுதியின் அடிப்படையில் தீர்ப்பளிப்பதற்காக குடும்ப நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியுள்ளோம்” என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.