விரைவில் வெளியாகிறது மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு 5.0 - திரையரங்குகள், பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுமா?
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கு தளர்வு 5.0-க்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்வு 4.0 செப்டம்பர் 30 அன்று முடிவடைகிறது.

கோப்புப்படம்
- News18 Tamil
- Last Updated: September 29, 2020, 7:49 PM IST
சமீபத்தில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பிற பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார். எனவே, வரவிருக்கும் ஊரடங்கு தளர்வு 5.0 வழிகாட்டுதல்கள் பல்வேறு நடவடிக்கைகளுக்காக கட்டுப்பாடுகளை மேலும் குறைக்க வாய்ப்புள்ளது. இந்த ஊரடங்கு தளர்வு 5.0 முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் நவராத்திரி, துர்கா பூஜை மற்றும் தசரா ஆகியவற்றின் திருவிழாக்கள் அக்டோபரில் நடைபெறவுள்ளன. மேலும், இந்த நேரத்தில் வணிகங்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஊரடங்கு தளர்வு 4.0 கட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க அனுமதிக்கப்பட்டது. மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ-பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், செப்டம்பர் 7 முதல் தரப்படுத்தப்பட்ட முறையில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க அனுமதிக்கப்பட்டது. செப்டம்பர் 21 முதல் 100 பேர் கலந்துகொள்ளும் வகையில் பொதுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில், ஊரடங்கு தளர்வு 5.0 கட்டத்தில் பின்வரும் தளர்வுகளை எதிர்பார்க்கலாம்:
சுற்றுலா
கடந்த 2 மாதங்களில் பல்வேறு நிபந்தனைகளுடன் சில சுற்றுலாத் தலங்கள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கடந்த ஜூலை மாதம் தாஜ் மஹாலைத் திறக்க அனுமதிக்கப்பட்டது. சமூக இடைவெளி மற்றும் ஒரேநேரத்தில் 5,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சமீபத்தில், உத்தரகண்ட் அரசு சுற்றுலாப் பயணிகளைத் தனிமைப்படுத்தாமல் மாநிலத்திற்குள் நுழைய அனுமதி அளித்திருந்தது.அதேபோல, அக்டோபர் 10ம் தேதி முதல் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளை மீண்டும் தொடங்க சிக்கிம் அரசு அனுமதித்துள்ளது. தமிழகத்தில் தளர்வு 4.0 வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத் தலங்களுக்கு இ-பாஸ் பெற்று செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஊரடங்கு சூழலில் நாட்டின் பொருளாதார சரிவுக்குக் காரணமான துறைகளில் சுற்றுலாத் துறையும் ஒன்றாக இருப்பதால், இந்தத் துறைக்கு மேலும் சில தளர்வுகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.
Also read: சந்தையில் ரூ.30,000க்குள் கிடைக்கும் சிறந்த எல்.இ.டி டிவிக்கள்
திரையரங்குகள்
தற்போது வரை, திறந்தவெளி தியேட்டர்களை மட்டுமே திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது. இருப்பினும், கடந்த 26ம் தேதி மேற்கு வங்க அரசு, சினிமா அரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிக்கும் என்றும், அக்டோபர் 1ம் தேதி முதல் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், சினிமா அரங்குகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதில் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பள்ளிகள்
ஊரடங்கு தளர்வு 4.0 வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 21ம் தேதியிலிருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க ஓரளவு தளர்வு அளிக்கப்பட்டது. இருப்பினும், மாணவர்களின் தன்னார்வ அடிப்படையில் மட்டுமே பள்ளிகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டன.
பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதார அமைச்சகம், மாணவர்கள் அமரும் நாற்காலிகள், மேசைகள் போன்றவற்றுக்கு இடையில் 6 அடி தூரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. மேலும், பாடம் கற்பிக்கும்போதும், வழிகாட்டுதல் நடவடிக்கைகளின்போதும் ஆசிரியர்கள் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்றும் மாணவர்களும் முகக்கவசங்கள் அணிவதை உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. எனவே, வரவிருக்கும் வழிகாட்டுதல்களில் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலும் தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளது.
மேலும், கடந்த முறை வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளில், மத்திய அரசுடன் முன் ஆலோசனை இல்லாமல் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே எந்தவொரு ஊரடங்கையும் மாநில அரசுகள் விதிக்கக் கூடாது என்ற ஒரு உத்தரவையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தளர்வு 5.0 கட்டத்தில் மேலும் பல தளர்வுகளை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நவராத்திரி, துர்கா பூஜை மற்றும் தசரா ஆகியவற்றின் திருவிழாக்கள் அக்டோபரில் நடைபெறவுள்ளன. மேலும், இந்த நேரத்தில் வணிகங்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஊரடங்கு தளர்வு 4.0 கட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க அனுமதிக்கப்பட்டது. மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ-பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், செப்டம்பர் 7 முதல் தரப்படுத்தப்பட்ட முறையில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க அனுமதிக்கப்பட்டது. செப்டம்பர் 21 முதல் 100 பேர் கலந்துகொள்ளும் வகையில் பொதுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.