‘அத்வானி போல் மோடி இல்லை...மோடிக்கு நாடு கடைசிதான்!’- தாக்கும் சந்திரபாபு நாயுடு

”அத்வானி மற்றும் வாஜ்பாயின் கருத்துகளுக்கு எல்லாம் பாஜக-வில் மதிப்பில்லை”.

Web Desk | news18
Updated: April 6, 2019, 2:55 PM IST
‘அத்வானி போல் மோடி இல்லை...மோடிக்கு நாடு கடைசிதான்!’- தாக்கும் சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
Web Desk | news18
Updated: April 6, 2019, 2:55 PM IST
”அத்வானி போல் மோடி கிடையாது. மோடியைப் பொறுத்த வரையில் தன்னலம் தான் முக்கியம். நாட்டுக்குக் கடைசி இடம்தான்” என தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு கூறுகையில், “அத்வானியின் கூற்று அவரது வேதனையைத்தான் வெளிப்படுத்தியுள்ளது. அத்வானியைப் பொறுத்த வரையில் நாடு தான் அவருக்கு முதலிடத்தில் இருக்கும். கட்சிக்கு இரண்டாம் இடமும் தன்னலத்துக்கு மூன்றாம் இடமுமே தந்துள்ளார். ஆனால், மோடிக்கு அமித் ஷாவுக்கு சுயநலம் தான் முக்கியம்.

நாட்டின் நலத்துக்கு அவர்கள் கடைசி இடம் தான் அளிப்பார்கள். அத்வானி மற்றும் வாஜ்பாயின் கருத்துகளுக்கு எல்லாம் பாஜக-வில் மதிப்பில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்வானி தனது வலைப்பக்கத்தில், “அரசியல் ரீதியாக எதிர் கருத்துகள் உள்ளவர்களைக் கட்சி ஒருநாளும் ’ஆன்டி- நேஷனல்’ அல்லது ‘எதிரி’ என்ற பெயர்களில் எல்லாம் கருதுவது இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மோடி மற்றும் அமித் ஷா இதுபோல் இல்லை என்ற விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன.

மேலும் பார்க்க: மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்பு! எந்த கட்சிக்கு எத்தனை?Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...