• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வரலாறு நீக்கம்; பெரியார், ஜின்னா சேர்ப்பு- கேரளா பல்கலைக்கழகம் அதிரடி

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வரலாறு நீக்கம்; பெரியார், ஜின்னா சேர்ப்பு- கேரளா பல்கலைக்கழகம் அதிரடி

தந்தை பெரியார்

தந்தை பெரியார்

கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வல்கர், தீனதயாள் உபாத்தியாயா உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டு பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரது கொள்கைகள் சேர்க்கப்படவுள்ளன.

  • Share this:
    கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வல்கர், தீனதயாள் உபாத்தியாயா உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டு பெரியார், முகமது அலி ஜின்னா ஆகியோரது கொள்கைகள் சேர்க்கப்படவுள்ளன.

    சம்பந்தப்பட்ட பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய, கேரளப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சார்பு துணைவேந்தரான பிரபாஷ் தலைமையில் இரு நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், 'நவீன அரசியல் சிந்தனையில் இந்தியா' என்னும் பாடத்தில் இருந்து தீனதயாள் உபாத்தியாயா, பால்ராஜ் மதோக் ஆகியோரின் தகவல்கள் நீக்கப்பட உள்ளன.

    கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் அண்மையில் முதுகலை எம்ஏ பட்டப் படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ சிந்தனையாளர்களான கோல்வல்கர், சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரைப் பற்றி பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் படிப்பு தலசேரியில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் கற்பிக்கப்பட்டது. இதற்கு மாணவர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

    கேரள மாணவர் சங்கம், காங்கிரஸ் மாணவர் பிரிவு, முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் பிரிவு ஆகியோர் பாடத்திட்டத் தாள்களை நகலெடுத்து, அவற்றை எரித்துத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல்கலைக் கழக கல்வி காவிமயமாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை பல்கலைக் கழக துணை வேந்தர் மறுத்தார்.

    இதுகுறித்து துணை வேந்தர் கூறும்போது, ''அரசியல் சிந்தனைகள் மற்றும் வரலாற்றைப் படிக்கும்போது அதன் அனைத்துப் பக்கங்களும் விவாதிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது மெளலான அபுல் கலாம் ஆசாத், முகமது அலி ஜின்னா மற்றும் ஈவேரா பெரியார் ஆகியோரின் சித்தாங்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: