Home /News /national /

மாணவிகளின் ஆபாச வீடியோ விவகாரம் - முக்கிய குற்றவாளிகள் கைது

மாணவிகளின் ஆபாச வீடியோ விவகாரம் - முக்கிய குற்றவாளிகள் கைது

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

கைதான மாணவியின் நண்பரான சன்னிமேத்தாவை போலீசார், இமாச்சலபிரதேச மாநிலம் ஷிம்லாவில் வைத்து கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chandigarh
    பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், இந்த வழக்கில் கைதான மாணவியின் நண்பர் சன்னி மேத்தா, இமாச்சலபிரதேச மாநிலம் ஷிம்லாவில் கைது செய்யப்பட்டார்.

    சண்டிகர் பல்கலைக்கழத்தில் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென மாணவிகள் போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக மாணவிகள் குளியல் அறையில் குளிப்பதை சக மாணவி ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இது சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம், போலீசார் வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தகவல்தொழிலநுட்பச் சட்டத்தில் முதல்தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.

    இதையடுத்து, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வீடியோவில் இருக்கும் மாணவி தன்னைத்தானே ஆபாசமாக வீடியோ எடுத்து அதை இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஆண் நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். அந்த நபர் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து, அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்தனர்.

    ஆனால், மாணவிகள் தரப்பிலே 60க்கும் மேற்பட்ட மாணவிகள் குளிக்கும் வீடியோ காட்சிகள் உலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேறு எந்த வீடியோவும் சமூகவலைத்தளத்தில் உலவவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.

    இதையும் படிங்க: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்.. வீடு புகுந்து பீர் பாட்டிலால் கழுத்தறுத்த எம்.எல்.ஏ. பி.ஏ.

    இந்த நிலையில், கைதான மாணவியின் நண்பரான சன்னிமேத்தாவை போலீசார், இமாச்சலபிரதேச மாநிலம் ஷிம்லாவில் வைத்து கைது செய்தனர். மேலும்,  பல்கலைக்கழக விடுதி காப்பாளர் ரஜீவிந்தர் சிங் உள்பட  2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மற்ற விடுதி காப்பாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். விடுதிக்குள் வரும் நேரம், வெளியே செல்லும் நேரத்தையும் மாற்றி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.



    இந்த விவகாரத்தில் வெளிப்படையான, நேர்மையான விசாரணை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம், போலீசார் வாக்குறுதி அளித்ததையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தை வரும் 24ம் தேதி வரை மூட நிர்வாகம் உத்தரவிட்டது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: College, Crime News, Porn websites

    அடுத்த செய்தி