Home /News /national /

மத்தியப்பிரதேசத்தில் திடீரென உருவான பீச் - பரபரப்பை ஏற்படுத்திய நூதன போராட்டக்காரர்கள்!

மத்தியப்பிரதேசத்தில் திடீரென உருவான பீச் - பரபரப்பை ஏற்படுத்திய நூதன போராட்டக்காரர்கள்!

மத்தியப்பிரதேசத்தில் திடீரென உருவான பீச்

மத்தியப்பிரதேசத்தில் திடீரென உருவான பீச்

Madhya Pradesh | போராட்டக்காரர்கள் பள்ளத்தில் பீச் அமைத்து அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

  மத்திய பிரதேச மாநிலத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நினைவு கூறும் விதமாக சாலைகளின் நடுவில் உள்ள பெரிய பள்ளத்தை போராட்டக்காரர்கள் கடற்கரையாக மாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இன்றைய சூழலில் அரசின் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய எந்தவொரு தேவைகளையும் மற்றும் உரிமைகளையும் பெற வேண்டும் என்றால் சாலையில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத் தான் மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். குடிநீர் தேவை, சாலை வசதி, தெருவிளக்கு கோரி என அடிப்படை பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். என்ன தான்? நாம் போராட்டம் செய்தாலும் அரசின் காதுகளுக்கு கேட்பதே இல்லை என்று தான் கூற வேண்டும்.

  அப்படியொரு நிகழ்வு தான் மத்தியப்பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் அரங்கேறியது. ஆனால் சற்று வித்தியாசமாக மக்கள் தங்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்த விதம் தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன?என்று கேட்கிறீர்களா? வாங்க என்ன தான் போரட்டக்காரர்கள் செய்துள்ளார்கள்? என நாமும் இங்கே பார்க்கலாம்…

  மத்திய பிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கானத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே தங்களிடம் ஓட்டு கேட்பதற்காக வரும் அரசியல்வாதிகளுக்குத் தாங்கள் படும் கஷ்டத்தைத் தெரிவிக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர். இதற்காக சாலையில் அமர்ந்து நடத்தக்கூடிய போராட்டத்தில் சில சுவாரஸ்சியமான விஷயங்களையும் தனித்துவமான செய்துள்ளனர்.

  Also Read : விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

  மத்திய பிரதேசத்தில் உள்ள அனுப்பூர் மற்றும் பிஜூரி மனேந்திரி பகுதியை இணைக்கும் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்துள்ளது. சமீப காலங்களாக மழை பெய்துவருவதால் சாலையில் உள்ள ராட்சத பள்ளத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கியிருந்தது. எனவே மழைநீர் தேங்கிய பள்ளத்தை கடல் போல் சித்தரித்து, அதில் சேர், டேபிள் போட்டுள்ளனர். இதோடு அதனருகே பீச்சில் இருப்பது போன்று சில செடிகளை நட்டு வைத்து ஸ்நாக்ஸ் சாப்பிடுவது போன்று ஏற்பாடுகளைப் போராட்டக்காரர்கள் செய்துவிட்டனர்.  சாலையில் விபத்து ஏற்படும் வகையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அதிகாரிகளுக்கு இப்பிரச்சனைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என இந்த போராட்டத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். இந்த நூதனப் போராட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது.

  குறிப்பாக போராட்டக்காரர்கள் பள்ளத்தில் பீச் அமைத்து அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையத்தில் பதிவிட்ட செய்தியாளர் ஒருவர், “ மத்திய பிரதேசத்தில் புதிதாக உருவான பீச்சைப்பார்க்க வியப்பாக உள்ளது எனவும் இது மிகவும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள் மத்திய மற்றும் மாநில அரசை கலாய்த்து ட்விட்களைப் பதிவிட்டு வருகின்றன. மேலும் இணையத்தில் பதிவிட்ட வீடியோக்களை இதுவரை 6 லட்சத்திற்கு மேலான நெட்டிசன்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

  மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி அதிகாரிகளுக்கு பல புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தான் அரசிற்கும் , அரசியல் வாதிகளுக்கும் தெரிவிக்கும் விதமாக தனித்துவமான நூதன போராட்டத்தைக் கையில் எடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Madhya pradesh, Viral

  அடுத்த செய்தி