Home /News /national /

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் - மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் - மத்திய அரசு அறிவிப்பு

சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் மாற்றம்

சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் மாற்றம்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    சர்வதேச ஓட்டுநர் உரிமம் அளிப்பதில் நாட்டின் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான புதிய அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

    தற்போது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அளிக்கப்படும் சர்வதேச ஓட்டுநர் உரிமங்களின் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதன் காரணமாக, வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தும் குடிமக்கள், சிரமங்களை சந்தித்து வந்தனர்.

    இந்நிலையில், இந்த திருத்தத்தின் காரணமாக, ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படுகிறது. ஓட்டுநர் உரிமத்துடன், சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை இணைப்பதற்கு க்யுஆர் கோடு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவி எண்களும், மின்னஞ்சல் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு விரைவில் நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ரூ.12,000க்கும் குறைவான சீன ஸ்மார்ட்போன்களுக்கு தடையா? - மத்திய அரசு விளக்கம்

    1949 ஜெனிவா ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஒரு பிரதிநிதியாக கையெழுத்துயிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்தேச ஒட்டுநர் உரிமம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மாநிலங்கள் வாரியாக இதில் மாறுபாடுகள் உள்ளதால், இதை சீர் செய்யும் விதமாக 1989ஆம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன சட்டத்துடன் ஜெனிவா ஒப்பந்தத்தை ஒப்பிட்டு, தேவையான மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Driving License, Uniform Driving License

    அடுத்த செய்தி