EIA 2020 வரைவை 22 மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு மறுப்பு - உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
EIA 2020 வரைவை 22 மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு மறுப்பு - உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
உச்சநீதிமன்றம்
EIA 2020 வரைவை 22 மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கூறி ஜூன் 30-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அனல்மின், புனல்மின், சாலைகள், அணுமின், பெரிய கட்டுமானங்கள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை 'சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-ன் கீழ் தான் பெற முடியும். இந்த அறிவிக்கையில் பல்வேறு மாறுதல்கள் செய்து அதன் வரைவினை பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
அதற்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி முடிவடைந்த நிலையில் அது தொடர்பாக வழக்கு ஒன்றில் உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வரைவு அறிவிக்கை இந்தியா முழுவதும் வசிக்கின்ற அனைத்து மக்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிற சட்டம் என்பதால் 22 மொழிகளில் அறிவிக்கையை மொழி பெயர்த்து 10 நாட்களுக்குள் மத்திய சுற்றுச்சூழல் துறை வெளியிட வேண்டும் என்றும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து கேட்க நேரம் வழங்க வேண்டும் என்று ஜூன் 30-ம் தேதியே உத்தரவிட்டிருந்தது.
ஆனால் மத்திய அரசு இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது வரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே இந்த வரைவு அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று பட்டியலிடப்பட்டு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் "ஆங்கிலம், ஹிந்தி மொழி தெரியாதவர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா? பிற மொழி பேசுபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.