குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஜப்பான் முன்னாள் பிரதமர் Shinzo Abe மூலம் 2007ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் வீழ்ச்சி அடைந்த இந்த அமைப்பு 2017ம் ஆண்டு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த அமைப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுவதும் உண்டு.
இந்தநிலையில் குவாட் அமைப்பின் உச்ச மாநாடு ஜப்பானில் நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் ஜப்பான் சென்றுள்ளனர். இந்தோ-பசிபிக் பிராந்திய வளத்துக்கான பொருளாதார கட்டமைப்பு (ஐ.பி.இ.எப்.) தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, ஜோ பைடனை சந்தித்து பேசினார்.
அதேபோல ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்தநிலையில், குவாட் மாநாட்டின் போது பிரதமர் மோடி முன்னே நடந்து செல்ல அவர் பின்னை ஜோ பைடன், அந்தோணி அல்பானீஸ், ஃபுமியோ கிஷிடோ நடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்தப் புகைப்படத்தை மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, பியூஸ் கோயல், பா.ஜ.க மூத்த தலைவர் அமித் மாளவியா ஆகியோர் அந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளனர்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.