மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் கார் விபத்து: மனைவி உயிரிழப்பு
மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அங்கோலாவில் முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் கோவா மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

- News18 Tamil
- Last Updated: January 12, 2021, 7:01 AM IST
மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவியும் அவரது நெருங்கிய உதவியாளரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் அவரது மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கர்நாடாடகா மாநிலம் எல்லாப்பூரில் உள்ள காந்தே கணபதி கோயிலுக்கு காரில் சென்றனர். அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் கோவிலில் பூஜை செய்து பின்னர் இரவு 7 மணியளவில் கோகர்ணா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அந்த சாலை மோசமான நிலையில் இருந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் ஹில்லூர்-ஹோசகாம்பி கிராமத்திற்கு அருகே தலைகீழாக கவிழ்ந்தது. இதில் மத்திய அமைச்சர் மனனைவி விஜயா மற்றும் இரண்டு பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க... சுக பிரசவத்திற்கு காத்திருந்து குழந்தையுடன் உயிரிழந்த நர்ஸ்
காயமடைந்தவர்களை அங்கோலாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே, மத்திய அமைச்சரின் மனைவி விஜயா உயிரிழந்தார். மேலும், உதவியாளர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அங்கோலாவில் முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் கோவா மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜயா நாயக்கின் மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.