Home /News /national /

பாஜக வாட்ஸ் அப் குரூப்களில் இருந்து திடீரென வெளியேறிய மத்திய அமைச்சர் - 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா?

பாஜக வாட்ஸ் அப் குரூப்களில் இருந்து திடீரென வெளியேறிய மத்திய அமைச்சர் - 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா?

BJP

BJP

பாஜகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் விலகிய பபுல் சுப்ரியோ, 5 பாஜக எம்.எல்.ஏக்கள் விரைவில் விலகக் கூடும் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாஜக தொடர்புடைய அனைத்து வாட்ஸ் அப் குரூப்களில் இருந்தும் மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் திடீரென விலகியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பாஜகவில் இருந்து விலகக் கூடும் எனவும் பேசப்படுகிறது..

    கப்பல் போக்குவரத்துத்துறையின் மத்திய இணை அமைச்சராக இருப்பவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சாந்தனு தாக்கூர். இவர் திடீரென மேற்குவங்க மாநில பாஜக வாட்ஸ் அப் குரூப்களில் இருந்து விலகியிருக்கிறார். எனவே அவர் பாஜகவில் இருந்து விலகக் கூடும் என அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. சாந்தனு தாக்கூர் மாதுவாஸ் (Matuas) என்ற சமூகத்தைச் சேர்ந்தவர். இணையமைச்சர் சார்ந்த சமூகத்தினருக்கு பாஜக போதிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என அவர் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் மேற்குவங்க மாநிலத்தில் பாஜகவின் அமைப்பு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் மாதுவாஸ் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக மாதுவாஸ் பிரிவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்களுக்கு பாஜகவின் மாற்றியமைக்கப்பட்ட மாநில மற்றும் மாவட்ட கமிட்டிகளில் இடம் கிடைக்கவில்லை. இது குறித்து ஏற்கனவே சாந்தனு தாக்கூர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தான் அவர் தற்போது வாட்ஸ் அப் குரூப்களில் இருந்து வெளியேறியிருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

    Also read:  முஸ்லிம் மாணவர்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்கக் கூடாது - இஸ்லாமிய அமைப்பு

    முகுத்மோனி அதிகாரி, சுப்ரதா தாக்கூர், அம்பிகா ராய், அசோக் கிர்தானியா மற்றும் அசிம் சர்க்கார் ஆகிய 5 பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு மாநில, மாவட்ட பாஜக கமிட்டிகளில் இடம் கிடைக்கவில்லை எனக் கூறி சில தினங்களுக்கு முன்னர் இணையமைச்சர் சாந்தனு தாக்கூரை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தனர். இவர்கள் ஏற்கனவே பாஜக வாட்ஸ் அப் குரூப்களில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

    Shantanu Thakur
    Shantanu Thakur


    பாஜகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் விலகிய பபுல் சுப்ரியோ, 5 பாஜக எம்.எல்.ஏக்கள் விரைவில் விலகக் கூடும் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தான் பாஜகவில் இருந்து விலகமாட்டேன் எனவும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் எனவும் சாந்தனு தாக்கூர் விளக்கமளித்துள்ளார்.

    Also read:  சிறுமி இறந்த பின்பும் பலாத்காரம் செய்த கொடூரர்கள் - பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

    இதனிடையே மத்திய இணையமைச்சர் சாந்தனு தாக்கூர் விவகாரம் குறித்து பேசிய மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார் அவர் பாஜகவின் ஒரு அங்கம். அவருடன் பேசித் தீர்த்து பிரச்னை சரிசெய்யப்படும் என தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: BJP

    அடுத்த செய்தி