மின்சார சட்ட திருத்த மசோதா 2022ஐ மக்களவையில் மத்திய அமைச்சர் ஆர்கே சிங் அறிமுகம் செய்துள்ளார். இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்வதற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர். இந்த எதிர்ப்புக்கு மத்தியில் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த மசோதா தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அத்துடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாநில அரசுகள் வழங்கும் இலவச மின்சார திட்டம், மானிய விலை மின்சார திட்டங்கள் போன்ற திட்டங்கள் பாதிப்பை சந்திக்கும் எனவும், உரிய நேரத்தில் மின்சார கட்டணங்களை மாநில அரசுகள் உயர்த்தியே தீர வேண்டும் போன்ற அம்சங்கள் பொதுமக்களுக்கு பாதகமாக அமையும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த திட்டம் மக்கள் நலனுக்கு எதிரானது என இன்று காலை ட்விட்டரில் தனது நிலைப்பாட்டை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு முழுவதும் 85 ஆயிரம் ஊழியர்களும், நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மின் துறை ஊழியர்களும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அனைத்து மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் பணி புறக்கணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த நிதீஷ் குமார்.. பீகார் பாஜக கூட்டணியில் விரிசலா?
அதேவேளை, மாநில அரசுகளின் மின்விநியோக நிறுவனங்கள் மிகப்பெரிய கடன் சுமை நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், நிர்வாக சிக்கல்களால் மோசமான நிலையில் உள்ள மின்சாரத்துறையை சீரமைக்கவே இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது என மத்திய அரசு தெரிவிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electricity, Lok sabha