Home /News /national /

குடியரசுத் தலைவர் உரையை எதிர்கட்சிகள் புறக்கணித்தது அகங்காரத்தின் வெளிப்பாடு - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடும் விமர்சனம்

குடியரசுத் தலைவர் உரையை எதிர்கட்சிகள் புறக்கணித்தது அகங்காரத்தின் வெளிப்பாடு - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடும் விமர்சனம்

ரவி சங்கர் பிரசாத்

ரவி சங்கர் பிரசாத்

குடியரசுத் தலைவர் உரையை எதிர்கட்சிகள் புறக்கணித்தது அகங்காரத்தின் வெளிப்பாடு என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உரையாற்றும் போது, அதில் பங்கேற்காமல் 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. குடியரசுத் தலைவர் உரையை எதிர்கட்சிகள் புறக்கணித்த செயல் விமர்சனத்துக்கு உள்ளானது. எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘குடியரசுத் தலைவர் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர். அவரின் உரையை எதிர்கட்சிகள் புறக்கணித்தது அகங்காரத்தின் வெளிப்பாடு அதுதான் பிரச்னை. மக்களின் ஆதரவு இல்லாவிட்டாலும், நாட்டை ஆள வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. நாடாளுமன்ற மரபுகளை எதிர்க்கட்சிகள் மீறிவிட்டன.

    காங்கிரஸ் ஆட்சியில் குடியரசுத் தலைவர் உரையை பாஜக புறக்கணித்தபோது, காங்கிரஸ் ஆட்சியின் ஊழலைக் கண்டித்தது. குடியரசு தினத்தில் டெல்லியில் நடந்த வன்முறையையும், தேசியக் கொடி அவமானப்படுத்தப்பட்டதையும் காங்கிரஸ் கண்டிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Law Minister Ravi Shankar Prasad

    அடுத்த செய்தி