இந்திய-சீன எல்லைப்பகுதியான பேங்காங் சோ ஏரிப் பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது, இந்தியா - சீனா இடையே உள்ள எல்லை பிரச்னைக்கு 3 கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார். அதன்படி படைகளை பின்வாங்கும் ஒப்பந்தத்தை இருநாட்டினரும் மதிக்கவேண்டும் என்று கூறிய ராஜ்நாத்சிங், இருநாட்டினரும் தன்னிச்சையாக அத்துமீறக்கூடாது என்று குறிப்பிட்டார். மேலும் இதுவரை செய்யப்பட்டுள்ள சமரச முயற்சிகளை இருநாடுகளும் ஏற்கவேண்டும் என்றும் கூறினார்.
இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் அமைதியை நிலைநாட்டவே இந்தியா விரும்புவதாக கூறிய ராஜ்நாத் சிங், ``இந்தியா-சீனா இடையேயான போர்பதற்றத்தை தடுக்கும் நோக்கில் , கடந்த ஜனவரி 24-ம் தேதி இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 9-ம் சுற்று பேச்சுவார்த்தையில் இது தொடர்பான முடிவு எட்டப்பட்டது. சீனாவுடன் மோதலில் ஈடுபட்டு 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த பாங்க்சாங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து இருநாட்டு படைகளும் படிப்படியாக ஒருங்கிணைந்த முறையில் பின்வாங்க ஒப்புக்கொண்டனர்” என்றும் தெரிவித்தார்.
இந்தியா தரப்பில் பின்வாங்கப்படும் படைகள் finger3 என்ற இடத்துக்கு மாற்றப்படும் என்று கூறிய ராஜ்நாத்சிங், படைகள் முழுமையாக பின்வாங்கிய அடுத்த 48 மணி நேரத்தில் பாங்காங் சோ பகுதியில் ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். மேலும், இந்திய நிலம் ஒரு அங்குலம் கூட விட்டுத்தர அனுமதிக்க முடியாது என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs China