• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பருவமழைக்குப் பிறகு நிலக்கரி விநியோகம் மேம்படும் - மத்திய அமைச்சர் நம்பிக்கை

பருவமழைக்குப் பிறகு நிலக்கரி விநியோகம் மேம்படும் - மத்திய அமைச்சர் நம்பிக்கை

பிரகலாத் ஜோஷி

பிரகலாத் ஜோஷி

பருவமழை முடிந்தபிறகு நிலக்கரி விநியோகம் மேம்படும் என்று நம்புகிறோம் என்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் உத்தரப் பிரதேசம் முதல் ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மின்சாரப் பற்றாக்குறை பெரிய அளவில் எழ மின்வெட்டுகள் அதிகமாகியுள்ளன. இந்தியாவின் நிலக்கரி உள்ளிட்ட எரியாற்றல் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவின் மின் உற்பத்தியில் 70% அனல் மின் உற்பத்திதான் பங்களிப்பு செய்கிறது. நிலக்கரி தட்டுப்பாட்டினால் இந்திய ஆற்றல் பரிமாற்ற நிறுவனத்தின் ஸ்பாட் விலைகள் கடந்த 2 வாரங்களில் 3 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. திங்களன்று ஒரு மணி நேரத்துக்கான மின் கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ.16.42 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச விலை!

    ராஜஸ்தான் மாநிலம் பெரிய அளவில் இதனால் பாதிக்கப்பட்டு நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு 2 மணி நேர மின் விட்டும், கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு 4 மணி நேர மின்வெட்டும் செய்யப்பட்டு மக்கள் கடும் அவதியில் உள்ளனர், தொழிற்துறையினர் திண்டாடி வருகின்றனர். இந்திய நிலக்கரி நிறுவனத்திலிருந்து ராஜஸ்தான் அனல் மின் உற்பத்திக்கு கொடுக்கப்படும் நிலக்கரியின் அளவு பாதிக்கும் கீழ் குறைந்தது.

    ராஜஸ்தான் மட்டுமல்ல, பஞ்சாப், ஜார்கண்ட், உ.பி. ஆகிய மாநிலங்களிலும் மின்வெட்டு கன ஜோராக இருந்து வருகிறது. வெள்ளியன்று இந்த நிலக்கரி பற்றாக்குறையினால் மகாராஷ்டிராவின் 11 கிகா வாட் திறன் கொண்ட உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் இன்னும் மோசமான நிலைக்கு மின்வெட்டு சென்று பொருளாதார வளர்ச்சியைப் பாதித்து சமூக உள்கட்டுமானங்கள் தகரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    அதாவது மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற சமூக உள்கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கின்றனர். நிலக்கரி தட்டுப்பாடு குறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி, ‘கோல் இந்தியா லிமிடெட்டில் தற்போது 22 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு உள்ளது. நேற்று 1.95 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுவரை வழக்கப்பட்டதிலேயே இதுதான் அதிகம்.

    நிலக்கரி விநியோகத்தை நாங்கள் தொடர்ந்து வேகமாக அதிகரிப்போம். தொடர் மழையின் காரணமாக நிலக்கரி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை முடிந்த பிறகு நிலக்கரி விநியோகம் மேம்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அக்டோபர் 21-க்குப் பிறகு, 2 மில்லியன் டன் நிலக்கரியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் தேவையான அளவு நிலக்கரி வழங்கப்படுவதை உறுதி செய்வோம்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: