ஹோம் /நியூஸ் /இந்தியா /

“பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்..”- மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் கோரிக்கை!

“பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்..”- மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் கோரிக்கை!

ஹர்தீப் சிங் பூரி

ஹர்தீப் சிங் பூரி

இதுவரை ஏற்பட்ட இழப்புகளை சரிக்கட்டிக் கொள்ளும் பணியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் கடந்த 15 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றத்தையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ளவில்லை. அதேநேரம், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 116 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, தற்போது 82 டாலர்களாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இதுவரை ஏற்பட்ட இழப்புகளை சரிக்கட்டிக் கொள்ளும் பணியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும், விலையை உயர்த்தாமல் எண்ணெய் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொண்டதாக அவர் கூறினார்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது, விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், கலால் வரியை 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், கடந்த ஆண்டு மே மாதத்திலும் மத்திய அரசு குறைத்ததை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டார்.

First published:

Tags: Crude oil, Petrol Diesel Price, Petroleum Minister, Union minister