முகப்பு /செய்தி /இந்தியா / சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்... மத்திய அமைச்சர் நதின் கட்கரி வேதனை

சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்... மத்திய அமைச்சர் நதின் கட்கரி வேதனை

காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது.

காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது.

India Road Accident | உயிரிழப்பை எதிர்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.

  • Last Updated :

சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மத்திய சாலைப் போக்குரவத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சாலை விபத்து தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது- சர்வதேச சாலை புள்ளி விபரங்கள் என்ற ஆவணத்தை சர்வதேச சாலைப் போக்குவரத்து கூட்டமைப்பு அளித்துள்ளது. இதன்படி, சாலை விபத்து அதிகம் ஏற்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது.

சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. உயிரிழப்பை எதிர்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். இது மொத்த உயிரிப்பில் 69.80 சதவீதம் ஆகும்.

நாட்டின் வளச்சிக்காக 22 பசுமை வழிச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5 எக்ஸ்ப்ரஸ் சாலைகள் 2,485 கி.மீ. தொலைவுக்கு ரூ. 1.63 லட்சம் கோடி செலவிலும், 17 இதர நெடுஞ்சாலைகள் 5,816 கி.மீ. தூரத்திற்கு ரூ. 1.93 கோடி செலவிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க - கோவில் சுவரை ஓட்டை போட்டு நகைகளை திருடிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வாகனத்தின் பதிவு எண் அல்லது சேசிஸ் எண் அடிப்படையில் ஃபாஸ்டேக் வழங்கப்படும். மார்ச் 30, 2022 வரையில் வங்கிகளால் மொத்தம் 4 கோடியே 95 லட்சத்து 20 ஆயிரத்து 949 கோடி ஃபாஸ்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்த வாகன பயன்பாட்டில் 96.5 சதவீதம் ஃபாஸ்டேக்குகள் முறைக்கு மாறியுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Accidents