இந்தியாவில் பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைத்து மாற்று எரிவாயுவுக்கு நகர வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. குறிப்பாக, பெட்ரோல், டீசல் எரிவாயுக்களில் எத்தனால் கலந்து பயன்படுத்தும் நவீன திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சர் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மாற்று எரிசக்தியை நோக்கி நாடு பயணித்து வரும் சூழலில் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்க வாய்ப்புகள் இல்லை. விதர்பா பகுதியில் பயன்படுத்தப்படும் பயோ எத்தனால் மூலம் வாகனத்திற்கான எரிவாயுவை தயாரிக்கலாம். மேலும், ஆழ் கிணறு நீர் மூலம் பசுமை ஹைட்ரஜன் தயாரித்து ஒரு கிலோ ரூ.70க்கு விற்க முடியும். இத்தனை நாள் உணவு தயாரித்து வழங்கி வந்த விவசாயிகள் இனி எரிசக்தியையும் தயாரித்து வழங்கும் காலம் உருவாகியுள்ளது என்றார்.
இதையும் படிங்க: நீர் பற்றாக்குறையை வெளிச்சத்திற்கு கொண்டுவர தண்ணீர் வண்டியில் திருமண ஊர்வலம் சென்ற தம்பதி
மேலும் அவர் கூறுகையில், நாட்டில் மாற்று எரிசக்திகளின் பயன்பாட்டில் முன்னுதாரணமாக மகாராஷ்டிரா விளங்க வாய்ப்புள்ளது. எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ சிஎன்ஜி, கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.115ஆக உள்ள நிலையில், ஒரு லிட்டர் எத்தனாலின் விலை ரூ.64 இருப்பதன் மூலம் பொது மக்களுக்கு எத்தனால் மிக மலிவான எரிசக்தியாக அமையும் எனக் கூறினார்.
அடுத்தாண்டு ஏப்ரல் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் 20 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் நாட்டின் எரிசக்தி தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி சுமை குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nitin Gadkari, Petrol, Petrol Diesel Price