ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவவில்லை- மத்திய அமைச்சர் விளக்கம்

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவவில்லை- மத்திய அமைச்சர் விளக்கம்

மன்சுக் மாண்டவியா

மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் இதுவரையில் ஒமிக்ரான் வைரஸ் பரவவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற வகை கொரோனா தற்போது குறைந்தது 17 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இது மிகவும் கவலையளிக்கும் கொரோனா வைரஸ் (Variant of Concern) என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. ஒமிக்ரான் ( omicron) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றோருவருக்கு பரவும் தன்மை உடையது என்றும் தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக குறைந்த அளவே செயலாற்றுவதாகவும் கூறப்படுகிறது.

  இந்த வைரஸின் காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளன. கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதனையடுத்து, இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி விடாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ள 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா 3வது தவணை தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

  இந்தநிலையில், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா, ‘இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஒமிக்ரான் வைரசை எதிர்த்துப் போராட அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளோம். ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் ஊடுருவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Omicron