Home /News /national /

வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு - மத்திய அமைச்சர் திட்டம்

வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு - மத்திய அமைச்சர் திட்டம்

கிரண் ரிஜிஜூ

கிரண் ரிஜிஜூ

வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

    வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்வது குறித்து ஆராய தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, ‘தேர்தலில் கள்ள ஓட்டு என்பது தீவிரமான பிரச்சினை. கள்ள ஓட்டை தடுப்பது குறித்து மத்திய சட்ட அமைச்சர் அளவில் பரிசீலனை நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது அந்த வழிமுறைகளில் ஒன்று. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போதைய நிலையில் விருப்பத்தின்பேரில்தான் உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் இருப்பது, கள்ள ஓட்டு ஆகியவற்றை தடுக்க ‘ஒரே நாடு ஒரே வாக்காளர் பட்டியல்’ முறையை கொண்டுவருவதுதான் எங்கள் நோக்கம். வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது எப்படி என்பது குறித்து ஆராயுமாறு தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆன்லைனில் ஓட்டு போட அனுமதிப்பது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது.

    ஆனால், எந்த முடிவாக இருந்தாலும், அது ஒளிவுமறைவின்றி, பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது. இந்திய தேர்தல் முறையை உலகமே பாராட்டுகிறது. அதிகமான ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அதற்காக ஓட்டு போடுவதை கட்டாயமாக்குவதற்கு சட்டம் கொண்டு வரும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை.ஜெயிலில் இருப்பவர்களை ஓட்டுப்போடுமாறு மத்திய அரசு வற்புறுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள் நீதிமன்றத்தின் அதிகாரவரம்புக்குள் இருப்பவர்கள்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Election

    அடுத்த செய்தி