ஹோம் /நியூஸ் /இந்தியா /

'படித்த பெண்கள் லிவ் இன் உறவில் இருக்கக் கூடாது..' - டெல்லி கொலை குறித்து மத்திய அமைச்சர் கருத்தால் சர்ச்சை!

'படித்த பெண்கள் லிவ் இன் உறவில் இருக்கக் கூடாது..' - டெல்லி கொலை குறித்து மத்திய அமைச்சர் கருத்தால் சர்ச்சை!

டெல்லி கொலை குறித்து மத்திய அமைச்சர் கவுஷல் போஸ் கருத்து

டெல்லி கொலை குறித்து மத்திய அமைச்சர் கவுஷல் போஸ் கருத்து

படித்த பெண்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்து வருவதே டெல்லி கொலை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க காரணமாகிவிடுகிறது என மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லி இளம் பெண் கொடூர கொலை குறித்து மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் கூறிய கருத்து தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.

  டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண் அவருடன் உறவில் இருந்த காதலனால் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வாலிபர் அஃப்தப் அமீன் பூனாவாலா, அங்கு தன்னுடன் பணியாற்றிய ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் காதல் உறவில் இருந்து வந்தார்.

  இருவரின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு ஏற்படவே, ஷ்ரத்தா - அஃப்தப் இருவரும் டெல்லிக்கு குடிபெயர்ந்து அங்குள்ள மெஹ்ராலி என்ற பகுதியில் வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். லின் இன் வாழ்க்கையில் இருவரும் இருந்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ள ஷ்ரத்தா அஃபத்தை வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்ட நிலையில், கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை அஃப்தப் கொடூரமாக கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார்.

  இந்த கொடூர கொலை நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இது குறித்து மத்திய இணை அமைச்சர் கவுசல் கிஷோர் கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது. டெல்லி இளம்பெண் கொலை அமைச்சர் கிஷோர், "நன்கு படித்த பெண்களுக்குத்தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. தாங்கள் வெளிப்படையாக இருப்பதாக நினைத்து, தங்கள் எதிர்காலத்தின் முடிவுகளை அவர்கள் தன்னிச்சையாக எடுக்கிறார்கள்.

  அவர்கள் ஏன் லிவ் இன் வாழ்க்கையில் இருக்க வேண்டும். பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடி திருமணம் செய்து வாழ வேண்டும். எனவே, படித்த பெண்கள் தங்கள் வாழ்க்கை பொறுப்புடன் வாழ வேண்டும். இது போன்ற லிவ் இன் உறவில் வாழ்வதை அவர்கள் செய்யக்கூடாது என்றுள்ளார்.

  அமைச்சரின் இந்த கருத்து பாதிக்கப்பட்ட பெண்களை குறை சொல்வதாக இருப்பதாக பலரும் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி ட்விட்டரில் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: 'வயிறு வலினு போனேன்.. கிட்னியை காணோம்' - தனியார் மருத்துவமனை மீது பரபர குற்றச்சாட்டை கிளப்பிய பெண்

  அவர் தனது பதிவில், "நல்லவேளை, பெண்கள் இந்த நாட்டில் பிறந்ததுதான் குற்றம் என அவர் கூறவில்லை. வெட்கமில்லாமல், இதயமில்லாமல், குரூர எண்ணத்துடன் அனைத்து பிரச்னைக்கும் பெண்கள்தான் காரணம் எனக் கூறுவது இன்றும் தொடர்கிறது. பெண்கள் முன்னேற்றத்தை பிரதமர் உண்மையிலேயே அக்கறை கொண்டவர் என்றால், இந்த மத்திய அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும். இந்த ஆண் ஆதிக்க சமூகத்தின் சுமையை பெண்கள் போதுமான வரை சுமந்து விட்டார்கள்" என்று அவர் காட்டமாக கூறியுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Delhi, Relationship