50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? - மத்திய அமைச்சர் விளக்கம்

50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? - மத்திய அமைச்சர் விளக்கம்

கொரோனா தடுப்பூசி

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை மற்றும் செயல் திறன் மிக்கவை. இது தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம்.

 • Share this:
  இந்தியாவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.

  இதைத்தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் 188 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் இல்லை. அதேநேரம் 21 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லை.

  நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை மற்றும் செயல் திறன் மிக்கவை. இது தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.

  இந்தியாவில் மேலும் 18-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாராகி வருகின்றன. அவை பல்வேறு கட்ட ஆய்வில் இருக்கின்றன. இந்தியா சுமார் 25 நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய உள்ளது.

  Must Read : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள தயக்கம்: காரணம் என்ன?

   

  மக்கள் தகுந்த முறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இதைத்தான் ‘உண்மையான தடுப்பூசிகளுடன் சமூக தடுப்பூசியும் முக்கியம்’ என நான் கூறி வருகிறேன்.” இவ்வாறு கூறினார்.
  Published by:Suresh V
  First published: