முகப்பு /செய்தி /இந்தியா / நியூஸ் 18-ன் தண்ணீர் இயக்கம் - ஸ்டாக்ஹோம் நகரில் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்!

நியூஸ் 18-ன் தண்ணீர் இயக்கம் - ஸ்டாக்ஹோம் நகரில் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தண்ணீர் பஞ்சத்தால் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

  • Last Updated :

தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக நியூஸ் 18 மற்றும் ஹார்பிக் இணைந்து சர்வதேச தண்ணீர் இயக்கத்தை நேற்று அறிமுகம் செய்துள்ளனர்.

தண்ணீர் இயக்கம் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தண்ணீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. நேற்று சர்வதேச தண்ணீர் இயக்கத்தை ஸ்டாக்ஹோம் நகரில் ஜல் சக்தி அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் மற்றும் குடிநீர்- துப்புரவுத்துறை செயலாளர் பரம் ஐயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், “ஜல் சக்தி அபிஞான் திட்டத்துடன் ஹார்பிக் மற்றும் நியூஸ் 18-ன் தண்ணீர் இயக்கம் இணைந்து செயல்படுவதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் பலரும் இணையும் போது பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த இயக்கம் பேரியக்கம் ஆக வளரும்” என்றார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் தண்ணீர் இயக்கத்தை ஒரு வரலாற்று முயற்சியாகப் பாராட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “தண்ணீர் பஞ்சத்தால் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகரிப்பதாலும் தேவைகள் கூடுவதாலும் காலநிலை மாற்றத்தாலும் தண்ணீர் பஞ்சம் அதிகரிக்குமே தவிர குறையாது. நாம் இப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நமது எதிர்காலம் கொடுமையானதாக இருக்கும்” என்றார்.

ஆர்.பி ஹைஜின் & ஹோம் நிறுவன மார்கெட்டிங் இயக்குநர் ஔக்லீன் அனேஜா கூறுகையில், “இன்றைய சூழலில் முக்கியமான விழிப்புணர்வாக தண்ணீர் சேமிப்பு குறித்து பிரசாரம் செய்வதில் ஹார்பி பெருமை அடைகிறது” என்றார்.

top videos
    First published:

    Tags: Mission Paani