• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 18 வயதுக்குட்பட்டோருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதியா?- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

18 வயதுக்குட்பட்டோருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதியா?- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

மத்திய அமைச்சர் பாரதி பவார்

மத்திய அமைச்சர் பாரதி பவார்

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பவார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கொரோனா தொற்றின் 2வது அலை பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் இடையே 3வது அலை குறித்த அச்சம் இருந்து வருகிறது. கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமே தீர்வே என்பதால், தடுப்பூசி செலுத்துவதை மத்திய , மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

    பொதுமக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். தற்போதுவரை இந்தியாவில் சுமார் 96 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு உட்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், 2 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையை நடத்தி வந்தது. இந்த பரிசோதனையின் 2ம் மற்றும் 3ம் கட்ட சோதனை முடிவுகள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (DCGI) அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு செலுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (DCGI) மருத்துவ நிபுணர் குழு (SEC) பரிந்துரைத்துள்ளது என்று செய்திகள் வெளிவந்தன.

    மேலும், இரண்டு வயது முதல் 18 வயது சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பவார், ‘குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டப்பணி செயல்முறையில் உள்ளது. இந்திய மருத்து கட்டுப்பாடு அமைப்பு மற்றும் வல்லுநர்களிடமிருந்து ஒப்புதல் வந்தபிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். அதற்கான பணிகள் சென்றுகொண்டிருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: