ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் - மத்திய அமைச்சர் அறிவிப்பு

2020-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு 15.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜே.இ.இ தேர்வுக்கு 9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் - மத்திய அமைச்சர் அறிவிப்பு
2020-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு 15.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜே.இ.இ தேர்வுக்கு 9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
  • Share this:
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. அதனையடுத்து, நாடு முழுவதும் 40 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டுள்ளன. மே மாதத்தில் நடைபெறவிருந்த நீட் தேர்வு, சிவில் சர்விஸ் தேர்வு ஒத்திவைக்கப்பட்டன.

இந்தநிலையில், மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டர் நேரலையில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘ஜூலை 26-ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்படும். ஜே.இ.இ முதன்மைத் தேர்வு ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும். சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.


2020-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு 15.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜே.இ.இ தேர்வுக்கு 9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.









Also see:
First published: May 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading