ஹோம் /நியூஸ் /இந்தியா /

சதாம் உசேன் போல இருக்கிறாரா ராகுல் காந்தி - சர்ச்சை கருத்துக்கு அமித் ஷா பதில்

சதாம் உசேன் போல இருக்கிறாரா ராகுல் காந்தி - சர்ச்சை கருத்துக்கு அமித் ஷா பதில்

அமித் ஷா

அமித் ஷா

பாரத் ஜோடோ யாத்திரையில் உள்ள ராகுல் காந்தியின் தோற்றம் சதாம் ஹூசைன் போல உள்ளது என அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா விமர்சனம் செய்திருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் வெற்றிக்காக ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. பாஜகவுக்காக அக்கட்சியின் முன்னணி தலைவரும் அசாம் மாநில முதலமைச்சருமான ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த செவ்வாய் கிழமை அன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஹிமந்தா தனது பேச்சின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தோற்றம் குறித்து பேசினார். அது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

  தேர்தல் கூட்டத்தில் பேசிய ஹிமந்தா, "பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் தோற்றத்தை நான் பார்த்தேன். அவரின் லுக் மாறியுள்ளது. ஒருவர் புதிய லுக்கில் தோற்றமளிப்பது ஒன்றும் தவறில்லை. ராகுல் காந்தி சர்தார் பட்டேல் போலவோ, காந்தி போலவோ தோற்றத்தை மாற்றினால் நல்லது. அல்லது நேரு போல் கூட தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எதற்கு சதாம் உசேன் போல முகத் தோற்றத்தை மாற்ற வேண்டும்" என்று கூறி கிண்டலடித்து விமர்சித்திருந்தார்.

  ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்களும், பிரமுகர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் டிவி சேனல் நடத்திய நிகழ்வில் பங்கேற்று பேசிய அமித் ஷாவிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டது.

  இதையும் படிங்க: வரலாற்றை திருத்தி எழுதுவோம்... நம்மை யாரும் தடுக்க முடியாது - மத்திய அமைச்சர் அமித்ஷா

  அதற்கு பதில் அளித்த அமித் ஷா, 'தேர்தல் காலத்தில் இது போன்ற பேச்சுக்கள் வருவது இயல்புதான். மக்கள் இதை கேட்பார்கள், மகிழ்வார்கள். ஆனால், வாக்களிப்பு, ஓட்டுக்கள் போன்றவற்றில் எந்த மாறுதல்களும் வராது. எனவே, இது போன்ற தேர்தல் கால பேச்சுக்களை ஜவ்வாக இழுக்க தேவையில்லை' என்றுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Amit Shah, Home Minister Amit shah, Rahul gandhi