மேற்குவங்கம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18,000 வரவு வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தமிழகத்தைப் போலவே, மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில்அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று மேற்குவங்க மாநிலம் கூச்பேஹரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது, “மேற்கு வங்கத்தில் பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலம் விவசாயிகள் பயன் பெறுவதை முதலமைச்சர் மம்தா பானா்ஜி தனது ஈகோவினால் தடுத்துவிட்டார்” என்று குற்றம் சாட்டினார்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், இதனால் அந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.6,000 கிடைப்பது தடுக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உதவித் தொகையை இழந்துவிட்டனர் எனவும் கூறினார்.
இதனால், “விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ.18,000 வரவு வைக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று கூறினார்.
மேலும் படிக்க... ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை இந்தியாவில் எழுப்பாமல் பாகிஸ்தானிலா எழுப்ப முடியும்? - மம்தா பானர்ஜியை விமர்சித்த அமித் ஷா
மேலும், “கடந்த ஆண்டு நிலுவையில் இருந்த ரூ.6,000, இந்த ஆண்டின் ரூ.6,000 மற்றும் அடுத்த ஆண்டுக்கான ரூ.6,000 என மொத்தமாக ரூ.18,000 உதவித்தொகையை உங்களால் பெற முடியும்'' என்றும் அமித் ஷா கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amith shah, Bjp campaign, Election Campaign, Farmers