மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி கொலை வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் படுகொலைக்கும் இந்த அமராவதி கொலைக்கும் ஒற்றுமைகள் இருப்பதால், இவற்றில் ஏதேனும் அமைப்புகள், வெளிநாட்டு சதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து சர்ச்சைக் கருத்து பேசியது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நுபர் சர்மாவின் கருத்தை கண்டித்து பாஜக அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்த நிலையில், அவர் மீது பல்வேறு இடங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சிலர் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியைச் சேர்ந்த 54 வயது மருந்தகர் உமேஷ் கோலே என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இவர் கடந்த ஜூன் 21ஆம் தேதி அவரின் வீட்டின் அருகே பலரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி, முத்சிர் அகமது, ஷாருக் பதான், அப்துல் தௌபிக், சொயப் கான், அதிப் ரஷித் ஆகிய ஐந்து பேரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. அதேவேளை, யூசுப் கான் என்ற ஆறாவது நபரை காவல்துறை தொடர்ந்து தேடி வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானின் உதய்பூரை சேர்ந்த கண்ணையா லால் என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு கருத்து தெரிவித்ததால் இருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: வீட்டிற்கு வந்த திருடனுக்கு 35 தையல்கள் - அதிர்ச்சி வைத்தியம் அளித்து பாராட்டுக்களை அள்ளிய வளர்ப்பு நாய்
இவரை கொலை செய்தவர்களுக்கு பயங்கரவாத குழுக்களுக்கு, அந்நிய சக்திகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி இதை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்நிலையில், அமராவதி கொலைக்கும் உதய்பூர் கொலைக்கும் ஒற்றுமை உள்ளதால் அமராவதி கொலை வழக்கு விசாரணையும் தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Home Minister Amit shah, NIA