ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் மூழ்கும் கப்பல்.. 2024 தேர்தலுக்குப் பின் அரசியிலில் இருந்து வெளியேறிவிடும் - அமித் ஷா விமர்சனம்

காங்கிரஸ் மூழ்கும் கப்பல்.. 2024 தேர்தலுக்குப் பின் அரசியிலில் இருந்து வெளியேறிவிடும் - அமித் ஷா விமர்சனம்

மத்திய அமைச்சர் அமித் ஷா

மத்திய அமைச்சர் அமித் ஷா

2024 தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் நாட்டின் அரசியலில் இருந்து வெளியேறிவிடும் என மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Himachal Pradesh, India

  இமாச்சலப் பிரதேசத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி உள்ளது.68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக இமாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது.

  இந்நிலையில், மாநிலத்தில் தேர்தல் பரப்புரை தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இமாச்சலத்தில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இம்முறை இந்த ட்ரென்ட்டை மாற்றி மீண்டும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் சூளுரைத்துள்ளார். அம்மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளார்.

  அமித் ஷா தனது உரையில், "காங்கிரஸ் கட்சி ராஜாக்கள் மற்றும் ராணிகளுக்கான கட்சியாகும். அங்கு பொதுமக்களுக்கு இடமில்லை. அது வாரிசு அரசியல் என்ற மோசமான அணுகுமுறையைப் பின்பற்றும் கட்சி.அந்த கட்சியில் 10 முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு களத்தில் நிற்கின்றனர். ஆனால் அந்த கட்சியில் ஏதேனும் பெரிய தலைவரின் மகனோ அல்லது மகளோ தான் முதலமைச்சராக வர முடியும். சாமானியர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஜனநாயக அரசியலில்  மன்னர்களுக்கு இடம் அளிக்க முடியுமா.

  அக்கட்சியால் தான் செய்து காட்டிய திட்டங்களை வைத்து வாக்கு கேட்க முடியாது.ஆனால் பாஜக காஷ்மீரின் நீண்ட கால பிரச்னையான 370 சட்டத்தை நீக்கியது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தான். அதேபோல் ராமர் கோயில் விவகாரம், பாகிஸ்தான் பயங்கரவாதம், ராணுவத்தில் ஒரு நாடு ஒரு ஓய்வூதியம் போன்றவற்றுக்கு பாஜக அரசு தான் தீர்வு கண்டுள்ளது. கொரோனா காலத்தில் உள்நாட்டிலேயே இரண்டு தடுப்பூசியை தயாரித்து அதை மக்களுக்கு இலவசமாக கொடுத்த மாபெரும் சாதனையை பாஜக அரசு செய்து காட்டியது.

  இதையும் படிங்க: ராணுவத்தில் சேரமுடியாத விரக்தியில் 20 வயது இளைஞர் தற்கொலை

  ஆனால், காங்கிரஸ் காலத்தில் நாடு எந்த முன்னேற்றமும் காணாமல் பின்னோக்கி சென்றது. காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பலாகும். ராகுல் காந்தி இங்கு தேர்தல் பரப்புரைக்கு வராமல், யாத்திரை சென்றுகொண்டிருக்கிறார். 2024ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி நாட்டின் அரசியலில் இருந்தே வெளியேறும் . நாட்டில் நிலவும் போதைப் பொருள் பிரச்னையை வேருடன் அழிக்க பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இமாச்சலத்தில் இருந்து போதை பொருளை முற்றிலுமாக ஒழிப்போம் என்பதை உறுதியுடன் கூறுகிறேன்." இவ்வாறு அமித் ஷா பேசியுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Amit Shah, Congress, Himachal Pradesh, Home Minister Amit shah