மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம், வட கிழக்கில் கிளர்ச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தி உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள, சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த 74வது பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகளை வழியனுப்பும் விழா நடைபெற்றது. இந்தியாவைச் சேர்ந்த 166 அதிகாரிகளுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 29 அதிகாரிகளும் பயிற்சி நிறைவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக்கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பேண்ட் வாத்தியங்கள் இசைத்தும், சாகசங்கள் செய்தும் பயிற்சி அதிகாரிகள் அசத்தினர்.
கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா எண்ணற்ற ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டார். நாட்டுக்காக 36 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் வீர மரணம் அடைந்துள்ளதாக கூறிய அமித்ஷா, பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரவமாக கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தடை விதித்தது மத்திய அரசின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு மிகச்சிறந்த உதாரணம் என்றார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம், வட கிழக்கில் கிளர்ச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தி உள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amith shah, BJP, Tamil News