• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அதிகரிக்கும் கொரோனா- பண்டிகை காலங்களில் கவனம் தேவை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

அதிகரிக்கும் கொரோனா- பண்டிகை காலங்களில் கவனம் தேவை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனா ஆபத்து முழுமையாக நீங்காத நிலையில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் சமூக இடைவெளியை மறந்துவிட்டு கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்ந்தால் தொற்று மேலும் அதிகரிக்கக் கூடும்.

  • Share this:
    கொரோனா  தொற்று எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் பண்டிகை காலங்கள் வருவதால் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

    இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை  குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று மட்டும் இந்தியாவில் 42,625 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 562 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த உயிரிழப்பு 4,25,757 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்களை அச்சமடைய செய்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இந்தியாவின் மொத்த தினசரி பாதிப்பில் 50% கேரளாவில் பதிவாகிறது.  கொரோனா பரவலை  கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் பரவல் அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிக்க: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஏற்றத் தாழ்வு: உலக சுகாதார நிறுவனம்!


    கொரோனா ஆபத்து முழுமையாக நீங்காத நிலையில், எதிர்வரும் பண்டிகை காலங்களில் மக்கள் சமூக இடைவெளியை மறந்துவிட்டு கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்ந்தால் தொற்று மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே, எதிர்வரும் பண்டிகை காலங்களை கவனத்தில்கொண்டு உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கும்படியும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படியும் அனைத்து மாநில அரசுகளுக்கும்  மத்திய சுகாதாரத் துறை செயலாளர்  ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் படிக்க: வாரத்தில் 3 நாட்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள்: கணக்கெடுப்பில் தகவல்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: