Home /News /national /

மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிடலாம்: மத்திய அரசு

மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கைவிடலாம்: மத்திய அரசு

ஊரடங்கு

ஊரடங்கு

பிப்ரவரி15ம் தேதிவாக்கில் தினசரி கொரோனா தொற்று சதவீதம் 3.63% ஆக குறைந்துள்ளது.  சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் கொரோனா சூழல் மாற்றமடைந்து வருகிறது. எனவே, கட்டுப்பாடுகளை தளர்த்துவது அல்லது முற்றிலும் கைவிடுவது குறித்து   மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கொரோனா கட்டுப்பாடுகளில் திருத்தம் மேற்கொள்ளலாம் அல்லது அவற்றை கைவிடலாம் எண்று மத்திய  சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனுடன் சேர்ந்து புதிய வகை திரிபான ஓமைக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி மாநில அரசுகள் தீவிர கட்டுப்பாடுகளை விதித்தன. ஞாயிறு ஊடங்கு, இரவு நேர ஊரங்கு, கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு, திரையரங்கு மற்றும் உணவங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதன் காரணமாக தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது அல்லது முற்றிலும் கைவிடுவது தொடர்பாக மாநில/ யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

    அதில்,  ஜனவரி 21ம் தேதி முதல் நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. பிப்ரவரி 15ம் தேதிவாக்கில் தினசரி கொரோனா தொற்று சதவீதம் 3.63% ஆக குறைந்துள்ளது.  சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் கொரோனா சூழல் மாற்றமடைந்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகள் மீண்டும் தடுத்து நிறுத்தம்


    தொடக்க மாதங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்கள்  அவற்றின் எல்லைகளிலும் விமான நிலையங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது அல்லது முற்றிலும் கைவிடுவது குறித்து   மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Central government, Corona safety, Covid-19

    அடுத்த செய்தி