கொரோனா மீட்பில் உலக அளவில் இந்தியா முதல் இடம்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா மீட்பில் உலக அளவில் இந்தியா முதல் இடம்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா சோதனை

ஒவ்வொரு நாளும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

  • Share this:
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரத்து 296 ஆகும். இந்தியாவில், 1 கோடியே 6 லட்சத்து 11 ஆயிரத்து 731 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதனால், கொரோனாவில் இருந்து மீண்வர்களின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 97.31 சதவீதமாக உள்ளது. இது உலகின் மிகச் சிறந்த மீட்பு விகிதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இதுவரை 82,63,858 பேருக்கு, 1 லட்சத்து 72 ஆயிரத்து 852 அமர்வுகள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களில் 68.55 சதவீதத்தினர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

Must read: சமையல் கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு... புதிய விலை இன்று முதல் அமல்

 

இந்நிலையில், வருகிற 20-ஆம் தேதிக்குள் புதுச்சேரியில் சுகாதார பணியாளர்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட வேண்டும் எனவும், இது குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர்கள் வருகிற 21-ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: