கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு - மத்திய சுகாதாரத்துறை

மாதிரி படம்

கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், புதுச்சேரி, இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது.

  இந்தியா முழுவதும், 6 மாநிலங்களில் 50,000 முதல் ஒரு லட்சம் வரை கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 17 மாநிலங்களில் 50 ஆயிரத்திற்கு கீழ் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  மேலும் மகராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பீகார், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. மாநில அரசுகள், கார்பரேட் நிறுவனங்கள் தடுப்பூசியை நேரடியாக வாங்குவதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை. ஊரகப்பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பூசி திட்டத்தை ஊரகப்பகுதிகளிலும் அதிகரிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

  அவரைத் தொடர்ந்து பேசிய ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, ‘நோய் அறிகுறி உள்ளவர்கள் கொரோனா சோதனை முடிவுகளுக்காக காத்திராமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு அடிப்படை சிகிச்சையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: