ஹோம் /நியூஸ் /இந்தியா /

விதிமுறைகளை முறையாக பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

விதிமுறைகளை முறையாக பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

கோவாக்சின் தடுப்பூசி

கோவாக்சின் தடுப்பூசி

கோவாக்சின் தடுப்பூசியை முறையான ஆய்வுக்குப் பின்னரே பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் தீவிரமடைந்தது. இந்தியாவிலும் மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கிய நிலையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனாவில் இருந்து தப்பித்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிதான் பிரதான ஆயுதம் என மருத்துவர்களும் ஆய்வாளர்களும் முடிவுக்கு வந்த நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரம் காட்டின. இந்தியாவும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளை முதலில் அறிமுகம் செய்தது.

  இதில்,கோவேக்சின் தடுப்பூசி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகும். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், இந்த கோவாக்சின் தடுப்பூசி ஒப்புதல் வழங்கியது தொடர்பாக சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகிவருகிறது. அரசியல் அழுத்தம் காரணமாக சில குறிப்பிட்ட நடைமுறைகளை பாரத் பயோட்டெக் நிறுவனம் பின்பற்றப்படவில்லை என்றும், 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.

  இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. அத்துடன், கோவேக்சின் தொடர்பான விஞ்ஞான அணுகுமுறை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றியதாக மத்திய சுகாதார துறை விளக்கம் அளித்துள்ளது. தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு, பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது. மேலும், பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அவசரகால சூழலில் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்காக கோவாக்சின் உள்ளிட்ட கொவிட்- 19 தடுப்பூசிகளுக்கான அனுமதியை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் துறைசார் நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் மட்டுமே தேசிய கட்டுப்பாட்டு ஆணையம் அளித்தது.

  இதையும் படிங்க: பண மதிப்பிழப்பு முடிவை நன்கு ஆலோசித்துதான் எடுத்தோம் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

  நுரையீரல், நோய் எதிர்ப்பு, நுண்ணுயிரியல், மருந்தியல், குழந்தை மருத்துவம் போன்ற துறைகளின் வல்லுநர்கள் நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது விளக்கத்தில் கூறியுள்ளது. இதனிடையே, கோவேக்சின் தடுப்பூசி விவகாரத்தில் வெளியில் இருந்து எந்த அழுத்தமும் வரவில்லை என பாரத் பயோடெக் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Corona Vaccine, Covaxin