அதிகரிக்கும் கொரோனா: பேரழிவு ஏற்பட்டுவிடும் -தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

மாதிரிப் படம்

தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு மிகத்தீவிரமாக இருந்தது. நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். அதன்காரணமாக இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு மிகக்கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. தற்போது, கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துவந்தது. நாள் ஒன்றுக்கு 50,000-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

    இந்தநிலையில், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகலயா, ஆந்திரப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய பத்து மாநிலங்களில் ஆய்வுகொண்டது. இதுகுறித்த தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ‘கடந்த சில வாரங்களில் 46 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படும் விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. 53 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதமாக உள்ளது.

    அதனால், மாநிலங்கள் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். இந்தநிலையில், குறிப்பிட்ட மாவட்டங்களில் தளர்வுகளை அதிகரித்தால் அது மிகப்பெரிய பேரழிவைக் கொடுக்கும். 10 சதவீததுக்கு அதிகமாக கொரோனா பாதிப்பு விகிதம் உள்ள மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டும். இந்த மாவட்டங்களில் 80 சதவீத கொரோனா பாதித்தவர்கள் வீட்டுத் தனிமையில் இருந்துவருகின்றனர். அவர்கள், வேறுயாரையும் சந்திக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையிருப்பின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும். 10 சதவீதத்துக்கு அதிகமான கொரோனா பாதிப்பு இருக்கும் மாவட்டங்களில் மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். 45 வயது முதல் 60 வயதுகுட்பட்டவர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசிகளை போடவேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published: