அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 80 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் இருக்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-ல் இருந்து 141-ஆக அதிகரித்துள்ளது.
வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 220-ஆக அதிகரிக்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறி இருக்கிறது. எனினும் விமானங்களின் இயக்கத்தை தொடங்கும் முன், ஏரோட்ரோம்கள் முதலில் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறி இருக்கிறது. தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்களை அமைக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
கோவாவில் உள்ள மோபா ; மகாராஷ்டிராவின் நவி மும்பை, ஷிர்டி மற்றும் சிந்துதுர்க் ; கர்நாடகாவின் கலபுர்கி, விஜயபுரா, ஹாசன் மற்றும் ஷிவமொக்கா ; மத்திய பிரதேசத்தின் தப்ரா ; உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மற்றும் நொய்டா ; குஜராத்தின் தோலேரா மற்றும் ஹிராசர் (ராஜ்கோட்) ; புதுச்சேரியின் காரைக்கால் ; ஆந்திரப் பிரதேசத்தின் தகதார்த்தி (நெல்லூர்), போகபுரம் மற்றும் ஓர்வாகல் (கர்னூல்) ; மேற்கு வங்கத்தின் துர்காபூர் ; சிக்கிமின் பாக்யோங், கேரளாவின் கண்ணூர் ; அருணாச்சல பிரதேசத்தின் ஹோலோங்கி (இட்டாநகர்) உள்ளிட்ட 21 இடங்களில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்களை அமைக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் இதுவரை தற்போதைய நிலவரப்படி, துர்காபூர், ஷிர்டி, சிந்துதுர்க், பாக்யோங், கண்ணூர், கலபுர்கி, ஓர்வாகல் மற்றும் குஷிநகர் ஆகிய 8 கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.
Also Read : போலி புன்னகையுடன் உலவுகிறேன்..! சிக்கிய டைரி - டிஜிபி கொலையில் கைதான இளைஞர்
UDAN திட்டத்தின் கீழ் விரிவாக்கம்...
விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ள தகவல்களின்படி , 2022-23 நிதியாண்டில் மண்டியின் நாக்சாலாவில் புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை மேம்படுத்த இமாச்சல் அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தவிர, 2022-23 நிதியாண்டில் RCS-UDAN-ன் கீழ் 35 விமான நிலையங்கள், ஹெலிபேடுகள் மற்றும் வாட்டர் ஏரோட்ரோம்களை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏரோட்ரோம்களுக்கான அளவுகோல்கள்...
விமானங்களை இயக்க ஏரோட்ரோம்கள் சில தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. DGCA-வின் நிபந்தனைகளின் படி, பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒரு விமானநிலையம் அதன் மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ், ஆப்ரேஷ்னல் ப்ரொசிஜர்ஸ், பிசிக்கல் கேரக்டரிஸ்டிக்ஸ், விஷுவல் எய்ட்ஸ், ரெஸ்க்யூ அன்ட் ஃபையர்- ஃபைட்டிங் சர்விசஸ் உள்ளிட்ட பலவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேற்காணும் இந்த வழிகாட்டுதல்கள் தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் விமான நிலையத்திற்கு உரிமம் வழங்குவதற்காக என்றாலும், விமான நிலையங்களை இயக்குவதற்கான உரிமம் சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கையின்படி மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
Also Read : பஹாரி சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு..! - காஷ்மீரில் அமித் ஷா அறிவிப்பு
புதிய வழிகாட்டுதல்களின்படி, DGCA வழங்கியுள்ள கொள்கை ரீதியான ஒப்புதல், முன்மொழியப்பட்ட விமான நிலையம், உரிமம் பெற்றவர் மற்றும் உரிமதாரரால் குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட தனிநபர்களால் நான்-கமர்ஷியல் செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. இதனிடையே ஏரோட்ரோம்களுக்கான உரிமம் தனியார் பயன்பாடு மற்றும் பொது பயன்பாடு உட்பட 2 வகைகளில் வழங்கப்படுகிறது மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டு ஏரோட்ரோம்களின் பயன்பாட்டில் திட்டமிடப்பட்ட விமானங்களின் (scheduled flights) செயல்பாடுகள் இருக்காது என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.