• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஏர் இந்தியா விற்பனை குறித்து இறுதிமுடிவு எடுக்கவில்லை - மத்திய அரசு விளக்கம்

ஏர் இந்தியா விற்பனை குறித்து இறுதிமுடிவு எடுக்கவில்லை - மத்திய அரசு விளக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

  • Share this:
    நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனமான ஏர் இந்தியாவை விற்கும் முயற்சியில் மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. ஏர் இந்தியா நிறுவன ஏலத்தில் பங்கேற்பதற்காக விண்ணப்பம் அளிப்பதற்கான அவகாசம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அதன் பங்குகளை வாங்க டாடா குழுமமும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் மட்டுமே விண்ணப்பித்து இருந்தன.

    இந்த சூழலில், நிதி ஏலத்தின் குறைந்தபட்ச தொகையாக 15 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க முன்வந்த டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. நடப்பாண்டு இறுதிக்குள் டாடாவிடம் ஏர்இந்தியாவை முழுமையாக ஒப்படைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் விடுவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு இறுதி முடிவெடுக்கும் என்றும், அதன்பின்னர் முறைப்படி தகவல் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: