முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவில் மாரடைப்பால் 28% பேர் உயிரிழப்பு- மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் மாரடைப்பால் 28% பேர் உயிரிழப்பு- மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

heart attack symptoms

heart attack symptoms

இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்று மத்திய அரசு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 28.1% பேர் மாரடைப்பால் மரணமடைவதாக மாநிலங்களவையில் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கன்னடப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான புனித் ராஜ்குமார் 2021-ம் ஆண்டு மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 46. ராஜ்குமார் காலையில் உடற்பயிற்சியில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இளம் வயதில் அவருடைய மறைவு நாடு முழுவதும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரைப் போலவே சமீப காலங்களில் இளம் வயதினர் பலரும் மாரடைப்பால் உயிரிழக்கும் சூழல் அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், மாரடைப்பால் உயிரிழப்பவர்கள் குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ’ஐ.சி.எம்.ஆர் ஆய்வு அறிக்கைகளின் படி, 1990ல் மாரடைப்பால் இறப்போர் 15.2%ஆக இருந்த நிலையில் 2023ல் 28.1%ஆக உயர்ந்துள்ளது. 2017-18ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, தினசரி புகை பிடிப்பவர்களில் 32.8% பேருக்கும், மதுப் பழக்கம் உள்ளவர்களில் 15.9% பேருக்கும், போதிய உடல் உழைப்பு இல்லாத 41.3% பேருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுகிறது.

இந்தியர்கள் ஆஸ்கர் விருது வென்றதற்கு பா.ஜ.க உரிமை கொண்டாடக் கூடாது- காங்கிரஸ் எம்.பி விமர்சனம்

போதுமான காய்கறிகள் மற்றும் பழங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாத 98.4% பேருக்கும் இருதய நோய் ஏற்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 - 60 வயதுடையவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது கணிசமாக அதிகரித்துள்ளது.

First published:

Tags: Heart attack