Home /News /national /

உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டனர் -மத்திய அரசு விளக்கம்

உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டனர் -மத்திய அரசு விளக்கம்

இந்திய மாணவர்கள்

இந்திய மாணவர்கள்

உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்துவந்தது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உக்ரைன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனையடுத்து, உக்ரைன் நாட்டைச் சுற்றி ராணுவத்தை நிறுத்தியது ரஷ்யா.

    அதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதல் தொடர்ந்தது. இது உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாகியது. அதனையடுத்து, ரஷ்யாவின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன.

    ரஷ்யாவின் செயல்பாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்துவருகிறது. இந்த போரின் காரணமாக உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா இந்த பயங்கரமான தாக்குதலின் காரணமாக இதுவரையில், 5,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள் ஆவர்.

    பொதுமக்களுக்கு 3,00-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ரஷ்யா நாட்டுத் தரப்பிலும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைன் மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைன் மீதான போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷோய்கு தெரிவித்துள்ளார்.

    உலக நாடுகளின் கடும் கண்டனங்களுக்குப் பிறகு ரஷ்யா ராணுவத் தாக்குதலிலிருந்து பின்வாங்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் வேகம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், இந்திய மாணவர் ஒருவர் ரஷ்யத் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளார்.

    ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு தடைவிதித்த உலக தடகள அமைப்பு

    இது இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் உடனடியாக இன்று கீவ்வை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரயில்கள் அல்லது வேறு எந்த போக்குவரத்தை பயன்படுத்தி இந்தியர்கள் கீவ்வை விட்டு வெளியேறி விட வேண்டும்' என்று என்று இந்தியத் தூதரகம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், கீவ்விலிருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: India, Russia - Ukraine

    அடுத்த செய்தி