ஹோம் /நியூஸ் /இந்தியா /

நீதிபதிகள் நியமனம்.. கொலிஜியத்தின் பரிந்துரை.. லிஸ்டில் தன்பாலின ஈர்ப்பாளர் இருந்ததால் நிராகரித்த மத்திய அரசு?

நீதிபதிகள் நியமனம்.. கொலிஜியத்தின் பரிந்துரை.. லிஸ்டில் தன்பாலின ஈர்ப்பாளர் இருந்ததால் நிராகரித்த மத்திய அரசு?

சவுரவ் கிர்பால்

சவுரவ் கிர்பால்

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 20 பேரை நியமிப்பதற்காக அனுப்பப்பட்ட பரிந்துரையையும் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 20 பேரை நியமிக்கும் கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியத்தின் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 20 பேரை நியமிப்பதற்காக அனுப்பப்பட்ட பரிந்துரையையும் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட 9 பேர் உட்பட 20 பேர்களை நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.

இதை கடந்த 25 ஆம் தேதி மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.கிர்பாலின் மகன் சவுரப் கிர்பால் பெயரும் இடம் பெற்றிருந்த நிலையில், அவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


First published:

Tags: High court, LGBT, Supreme court