ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்த விதிகளை மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம்! - சமூக வலைதள பிரபலங்களுக்கு புதிய கட்டுப்பாடு

இந்த விதிகளை மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம்! - சமூக வலைதள பிரபலங்களுக்கு புதிய கட்டுப்பாடு

சமூக வலைதள பிரபலங்கள்

சமூக வலைதள பிரபலங்கள்

சமூக வலைதள பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு மறைமுகமாக பொருட்களை மக்களிடம் விற்கும் சந்தை தற்போது ரூ. 1,275 கோடியாக உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பொருட்களை விற்க முயற்சிக்கும் சமூக வலைதள influencerகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி போலியான பொருட்களை மக்களிடம் விற்பதை தவிர்க்கும் நோக்கில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.  சமூக வலைதள பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு மறைமுகமாக பொருட்களை மக்களிடம் விற்கும் சந்தை தற்போது ரூ. 1,275 கோடியாக உள்ளது.

இந்த சந்தை வரும் 2025ம் ஆண்டுக்குள் 2,800 கோடி ரூபாயை எட்டும் என கணிக்கப்படுகிறது. புதிய விதிகளின்படி, ஒரு பொருள் பற்றி தகவல்களை இந்த பிரபலங்கள் வெளியிடும்போது, அதற்காக பணம் பெற்றார்களா, இல்லை பரிசாக ஏதும் பொருள் பெற்றார்களா என்பதை வீடியோவில் குறிப்பிட வேண்டும்.

எளிமையான மொழியில் அந்த விளக்கம் இருக்க வேண்டும். புதிய விதிகளை மீறுவோருக்கு வீடியோ வெளியிட ஓராண்டு தடை மற்றும் முதல் முறை அபராதமாக 10 லட்சம் ரூபாய் வரை விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசின் CCPA அமைப்பு தெரிவித்துள்ளது.

First published:

Tags: Influencer, Social media, Union Govt