Home /News /national /

பொருளாதார இடஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாற்றம் தேவையில்லை- மத்திய அரசு பிரமாணப் பத்திரம்

பொருளாதார இடஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாற்றம் தேவையில்லை- மத்திய அரசு பிரமாணப் பத்திரம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

ews reservation | பொருளாதார இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு 8 லட்ச ரூபாய் என்பதை மாற்ற வேண்டியதில்லை என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பை மறுஆய்வு செய்ய,  உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், 8 லட்ச ரூபாய் எனும் வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்ய வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பெண்களை ஏலம் விட்ட புல்லிபாய் ஆப் முடக்கம்: குற்றத்துக்கான பின்னணி என்ன?



     அதேசமயம், 5 ஏக்கரும் அதற்கு மேலும் நிலம் உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இடமில்லை என்ற பரிந்துரை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.


    நடப்பு கல்வி ஆண்டில் தற்போது நடைமுறையில் உள்ள விதிகளுடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்களுக்கான இடஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என, மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பான வழக்குகள், வரும் 6ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன.
    Published by:Karthick S
    First published:

    Tags: Reservation, Supreme court

    அடுத்த செய்தி